2013 ஆண்டு ரணில் பொறுப்புடன் பதிலளிக்கவில்லை : அநுரகுமார (Live )

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் 2013 ஆம் ஆண்டு பாராளுமன்ற கவனத்துக்கு கொண்டு வந்திருந்தேன். ஆனால் அதனை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதோடு ரணில் விக்கிரமசிங்க பொறுப்பற்ற வகையில் பதிலளித்தார் என ஜே.வி.பி.யின் தலைவர் அநுராகுமார திஸாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் தொடர்புடைய அர்ஜீன மஹேந்திரனை காப்பாற்றும் வகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் கடந்த காலங்களில் அமைந்திருந்தன.

குறிப்பாக பாராளுமன்றில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது பொறுப்பற்ற வகையிலேயே பதிலளித்து இருந்தார்.

You may like 

Our Other websites : 

Tags: anura kumara dissanayake blamed ranil wickramasinghe parliament, anura kumara dissanayake blamed ranil wickramasinghe parliament