தைத்திருநாளை வரவேற்று நல்லூர் கந்தன் ஆலயத்திலும் சிறப்பு பூஜை வழிபாடுகள்

Special Pooja prayers welcomed Nallur Kanthan temple

(Special Pooja prayers welcomed Nallur Kanthan temple)

இனிய தைத்திருநாளை வரவேற்று இன்று நல்லூர் கந்தசாமி ஆலயத்திலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் விமர்சையாக இடம்பெற்றன.

இதில் கருவரையில் வீற்று இருக்கும் வேல் முருகப்பெருமானுக்கு விசேட அபிசேங்கள், ஆராதணைகள் என்பன இடம்பெற்றன.

இதில் இந்துமக்கள் பலரும் கலந்துகொண்டு முருகப்பெருமானின் இஷ்ட சித்திகளை பெற்றுக்கொண்டனர்.

உள்நாட்டு பக்தர்கள் போன்றே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆலய வளாகத்தில் பொங்கல் பண்டிகையை ரசித்த வண்ணம் இருந்தமையை காணக் கூடியதாக இருந்தது.

ஈழமக்கள் ஐனநாயகட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான பொங்கல் நிகழ்வுகள் இன்று ஸ்டேன்லி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தின் முன்றலில் நடைபெற்றது.

இதில் பெருந்திரளான ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Special Pooja prayers welcomed Nallur Kanthan temple

(Special Pooja prayers welcomed Nallur Kanthan temple)

Top Stories :

Our Other websites :