பிரித்தானிய இளவரசரின் விஜயும் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Britian Prince Edward visit SriLanka end month

(Britian Prince Edward visit SriLanka end month)

பிரித்தானிய இளவரசர் எட்வட்டின் இலங்கை விஜயம் இந்த மாதயிறுதியில் இடம்பெறும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

அவர் எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள 70 வது சுதந்திர தின நிகழ்விலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய இளவரசரின் இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவை மேலும் வலுப்படுத்தும் என பிரித்தானியா சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்போது பொதுநலவாய, இளைஞர் அபிவிருத்தி மற்றும் கல்வி தொடர்பான விடயங்களை பகிர்த்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இளவரசரின் விஜயத்தின் ஒரு கட்டமாக திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா பிரதேசங்களுக்கும் அவர் செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது விருது வழங்கும் நிகழ்வொன்றிலும் இளவரசர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்பதுடன், இளைஞர் குழுக்களையும் சந்திக்கவுள்ளனர்.

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஏப்ரல் மாதம் லண்டனில் நடைபெற்றவுள்ள நிலையில் அதற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Britian Prince Edward visit SriLanka end month)

Top Stories :

Our Other websites :