ரணிலை பதவி விலக்குகிறாரா மைத்திரி? : மங்கள பதில் பிரதமர்

0
430
maithripala sirisena ranil wickramasinghe mangala samaraweera

maithripala sirisena ranil wickramasinghe mangala samaraweera
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் பொறுப்புகூற வேண்டிய சகலரும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாக தெரிவித்துள்ள நிலையில், பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகுவதற்கு முன்னதாக பதவிலியிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோருவார் என நம்பதகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு ரணில் பதவி நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் நிதியமைச்சர் மங்கள் சமரவீர பிரதமராக நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி அண்மையில் பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்,

‘தான் ஆட்சிக்கு வரும் போது கடந்த அரசாங்கத்தில் நடந்த ஊழல் மோசடிகளை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பேன் எனவும் நல்லாட்சியில் ஊழலில் ஈடுபவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஆட்சிக்கு வரும் போது நாட்டு மக்களுக்கு வாக்குறு வழங்கியிருந்தேன்.

தற்போது பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் எழுந்தன என தெரிவித்திருந்தார்.

அதேசமயம், பிணை மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பியிருந்த கேள்விகளுக்கு பிரதமர் பதில் வழங்கியுள்ளதாகவும் எதிர்வரும் 20 ஆம் திகதியளவில் ஆணைக்குழு முன் சாட்சியமளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ‘மிஸ்டர் கிளீன்’ என்ற பிரதிமையை நீண்ட காலமாக கொண்டிருக்கும் பிரதமரை பதவி விலகி அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்குமாறு ஜனாதிபதி பிரதமரை கோருவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Top Stories :

Our Other websites :

Tags: maithripala sirisena ranil wickramasinghe mangala samaraweera, maithripala sirisena ranil wickramasinghe mangala samaraweera

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here