கிரேட் சௌத் ரன் : வெற்றியை உறுதிசெய்த நடப்பு சம்பியன் கிரிஸ் தொம்சன்!

Chris Thompson wins second consecutive Great South Run

(Chris Thompson wins second consecutive Great South Run 2017)

பிரிட்டனில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட கிரேட் சௌத் ரன் அரை மரதன் ஓட்டப்பந்தயத்தின் ஆடவர் பிரிவின் முதலிடத்தை பிரிட்டனின் கிரிஸ் தொம்சன் பிடித்துக்கொண்டதுடன், மகளிர் பிரிவின் முதலிடத்தை பிரிட்டனின் கெம்மா ஸ்டீல் பிடித்துக்கொண்டார்.

உலகில் பல பாகங்களிலும் நடாத்தப்படும் அரை மரதன் போட்டிகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது, கிரேட் சௌத் ரன் அரை மரதன் போட்டி. சுமார் 16 கிலோ மீற்றர் கொண்ட இந்த அரைமரதனில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்குபற்றுவர்.

இதில் கடந்த வருடம் ஆடவர் பிரிவில் வெற்றிபெற்றிருந்த தொம்சன், தொடர்ந்து இரண்டாவது முறையாக இம்முறையும் வெற்றிபெற்றுள்ளார். இவர் போட்டித்தூரத்தை 48.32 நிமிடங்களில் நிறைவுசெய்ய, சுமார் 3 செக்கன்கள் பிந்திய (48.35) மெட் சார்ப் இரண்டாவது இடத்தையும், 4 செக்கன்கள் (48.36) பின்தங்கிய பென் கொன்னர் 3வது இடத்தையும் பிடித்துக்கொண்டனர்.

இதேவேளை மகளிர் பிரிவின் முதலிடத்தை கெம்மா ஸ்டீல், போட்டித்தூரத்தை 55.25 நிமிடங்களில் நிறைவுசெய்து முதலிடத்தை பிடித்துக்கொண்டதுடன், லில்லி பெட்ரிட்ஜ் 55.37 நிமிடங்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை சார்லோட் பர்வுடேவும் (55.43) பிடித்துக்கொண்டனர்.

<<More News>>

<<Our other websites>>

Tags : Chris Thompson wins second consecutive Great South Run 2017, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here