இந்திய வீராங்கனைக்கு 8 ஆண்டுகள் தடை…!

Asian Games gold winner Priyanka Panwar banned eight years

(Asian Games gold winner Priyanka Panwar banned eight years)

இந்தியாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான பிரியங்கா பன்வாருக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவினால் 8 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஆண்டு இரண்டு முறை ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு குற்றத்தை உறுதிசெய்து தண்டனையை வழங்கியுள்ளது.

குறித்த தண்டனையானது கடந்த வருடம் ஜுலை மாதத்திலிருந்து கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 வருட தடை என்பது அவரது தடகள வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகளில் 4 x 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிரியங்கா பன்வார் தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<More News>>

<<Our other websites>>

Tags : Asian Games gold winner Priyanka Panwar banned eight years, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here