கிரேட் பிரிட்டன் ரன்! : தொடர்ச்சியாக நான்கு முறை வென்று மோ பராஹ் சாதனை!

Mo Farah wins record fourth straight year Great North Run

(Mo Farah wins record fourth straight year Great North Run)

பிரிட்டனில் நேற்று நடைபெற்ற 37வது கிரேட் நோர்த் ரன் அரை மரதனில் தொடர்ச்சியாக நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்று, மோ பராஹ் சாதனை படைத்துள்ளார்.

கிரேட் நோர்த் ரன் மரதனில் 4 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று கென்ய வீரர் பென்ஷன் மஷ்யாவின் சாதனையை மோ பராஹ் சமப்படுத்தியுள்ளார்.

கென்ய வீரர் பென்ஷன் 1991, 1992, 1994 மற்றும் 1996ம் ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை வென்று சாதனைப்படைத்திருந்தார். இந்த சாதனையை மோ பராஹ் 2014, 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் வெற்றிபெற்று, சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

மோ பராஹ் கடந்த மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 5000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று, உள்ளக அரங்கு ஓட்டப்பந்தயங்களில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார்.

இதேவேளை மகளிர் பிரிவில் கென்யாவின் மேரி கெய்டானி சம்பியன் பட்டத்தை வென்றதுடன், ஆண்களுக்கான சக்கர நாற்காலி மரதன் போட்டியில், சிம்மன் லவ்ஸனும், பெண்களுக்கான சக்கர நாற்காலி பிரிவில் மெனுலா சேரும் சம்பியன் பட்டத்தை வென்றனர்.

<<More News>>

<<Our other websites>>

Tags : Mo Farah wins record fourth straight year Great North Run, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here