கிரேட் நோர்த் ரன் மரதனில் பங்குகொள்ளும் பிரிட்டன் பரா வீராங்கனை!

World Para-athletics sprint champion eyes CWG marathon

(World Para-athletics sprint champion eyes CWG marathon)

பிரிட்டனைச் சேர்ந்த பரா ஒலிம்பிக் சம்பியனும், இரண்டு முறை உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றவருமான சம்மி கிங்கோர்ன் நாளை நடைபெறவுள்ள கிரேட் நோர்த் ரன் மரதன் போட்டியில் பங்குகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் கடந்த ஜுலை மாதம் லண்டனில் நடைபெற்ற உலக பரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் டி53 100 மீற்றம் மற்றும் 200 மீற்றர் சக்கர நாற்காலிப்போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

இந்நிலையில் அடுத்தவருடம் நடைபெறவுள்ள கொமன்வேல்த் பரா போட்டிகளில் சம்மி கிங்கோர்ன் 1500 மீற்றர் மற்றும் மரதன் போட்டிகளில் கலந்துக்கொள்ளவுள்ளார். இதற்கான பயிற்சிபெறும் நோக்கில் இவர் நாளை கிரேட் நோர்த் ரன் மரதன் போட்டியில் பங்குகொள்ளவுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சம்மி கிங்கோர்ன், உள்ளக அரங்கு போட்டிகளிலிருந்து, மரதன் போட்டிகளில் பங்குகொள்வது மிகப்பெரிய மாற்றமாகும். இதற்கு முன்னர் மரதன் போட்டிகளில் நான் கலந்துக்கொண்டதில்லை. கிரேட் நோர்த் ரன் மரதன் போட்டி 13 மைல்கலை கொண்டது. இந்த போட்டி எனது மரதன் எதிர்காலத்துக்கு சிறந்த ஆரம்பமாக அமையும்.

கிரேட் நோர்த் ரன் மரதனில் கலந்துக்கொண்ட பின்னர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சிட்டகொங் அரை மரதன் போட்டியில் பங்குகொள்ளவும் எதிர் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

<<More News>>

<<Our other websites>>

Tags : World Para-athletics sprint champion eyes CWG marathon, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here