ஒரே உதையில் கொல்லப்பட்ட பளு தூக்கும் சம்பியன் (காணொளி இணைப்பு)

World Champion power lifter killed MMA fighter russia viral video

World Champion power lifter killed MMA fighter russia viral video

ரஷ்யாவைச் சேர்ந்த பளு தூக்கும் போட்டியில் உலக சம்பியன் பட்டம் மற்றும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற வீரரரொருவர் வீதியில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரி ட்ரச்சிவ் (32) என்ற பளு தூக்கும் வீரரே இவ்வாறு நடு வீதியில் வைத்து கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் ரஷ்யாவின் ஹபரோவ்ஸ்க் பகுதியிலுள்ள தேநீரகம் ஒன்றுக்கு முன், அவரது நண்பரொருவருடன் இடம்பெற்ற வாக்குவாதத்தினால் இவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் ஆண்ட்ரி ட்ரச்சிவின் தலையில் உதைத்த ஒரே உதையில் அவர் சுயநினைவின்றி தரையில் விழுந்துள்ளார். பின்னர் குறித்த நபர் ஆண்ட்ரி ட்ரச்சிவை பலமாக தாக்கியுள்ளார். குறித்த காணொளி சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர் சண்டை பயிற்சி கற்றுள்ளவர் என்றும், அவரது சண்டை பயிற்சி தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதமே, கொலைக்கு காரணமாக இருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொலைச் சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதியுள்ளது.

<More News>>

<<Our other websites>>

World Champion power lifter killed MMA fighter russia viral video, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here