மென்செஸ்டர் அணியில் விளையாடும் கனவு பறிபோனது! : சோகத்தில் மூழ்கிய உசைன் போல்ட்!

Usain Bolt miss September charity match Old Trafford

Usain Bolt miss September charity match Old Trafford

தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசைன் போல்ட், உதைப்பந்தாட்ட போட்டிகளில் விளையாட ஆர்வமாகவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல உதைப்பந்தாட்ட கழகமான மென்செஸ்டர் யுனைடட் அணியில் விளையாடுவதற்கு உசைன் போல்ட்டிற்கு வாய்ப்பு கிடைத்தும், காயம் காரணமாக விளையாட முடியாததால் அவர் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார்.

8 ஒலிம்பிக் தங்கப்பதக்கம், 11 முறை உலகச் சம்பியன் தங்கம் என கடந்த 10 வருடங்களாக தடகள போட்டிகளில் உசைன் போல்ட் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவைத்திருந்தார்.

எனினும் இறுதியாக நடைபெற்ற சம்பியன் தொடரில் ஒரு வெண்கலப்பதக்கத்துடன் வெளியேறிய போல்ட், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அளித்திருந்தார்.

தற்போது உதைப்பந்தாட்டத்தில் ஆர்வம் செலுத்தும் உசைன் போல்ட்டிற்கு அவரது கனவு அணியான மென்செஸ்டர் அணியுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார்.

சம்பியன் தொடரின் 4×100 அஞ்சலோட்ட போட்டியின் போது உசைன் போல்ட் உபாதைக்குள்ளாகியிருந்தார். இந்நிலையில் குறித்த உபாதை குணமடைந்ததும், எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி மென்செஸ்டர் யுனைடட் பவுண்டேசனுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெறவுள்ள பார்சிலோனவுக்கு எதிரான கண்காட்சிப் போட்டியில் விளையாடவிருந்தார்.

எனினும் தற்போது வைத்தியர்களின் ஆலோசனைப்படி மூன்று மாதங்கள் கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் உசைன் போல்ட் குறித்த கண்காட்சி போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

கனவு அணியான மென்செஸ்டர் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும், போட்டியில் விளையாட முடியாமல் போனதால் உசைன் போல்ட் மிகப்பெரிய ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளார்.

<More News>>

<<Our other websites>>

Usain Bolt miss September charity match Old Trafford, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here