நெய்மரை அடுத்து மற்றுமொரு பிரேசில் வீரரை ஒப்பந்தம் செய்தது பார்சிலோனா

Barcelona transfer news Paulinho sign Barcelona

Barcelona transfer news Paulinho sign Barcelona

பிரேசிலைச் சேர்ந்த உதைப்பந்தாட்ட வீரர் பௌலின்ஹோவை பார்சிலோனா அணி 40 மில்லியன் யுரோவுக்கு ஒப்பந்தம் செய்ய முடிவுசெய்துள்ளது.

பிரபல வீரர் நெய்மர் அணியிலிருந்து விலகி, பாரிஸ் ஜெயின் ஜெர்மைன் அணியில் இணைந்த பின்னர், பார்ஸிலோனா அணி ஒப்பந்தம் செய்யவுள்ள முதலாவது வீரர் பௌலின்ஹோ என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

29 வயதாகும் நடுக்கள வீரர் பௌலின்ஹோ டொட்டங்கம் உதைப்பந்தாட்ட கழகத்தின் முன்னாள் வீரர் என்பதுடன், தற்போது சீனாவைச் சேர்ந்த குவான்க்ஷோ எவர்கிரேன்ட் அணிக்காக விளையாடி வருகின்றார்.

கடந்த 2011ம் ஆண்டிலிருந்து விளையாடிவரும் பௌலின்ஹோ 41 போட்டிகளில் விளையாடி 9 கோல்களை அடித்துள்ளதுடன், பிரேசில் 2013ம் ஆண்டு கன்பெடரேஷன் கிண்ணத்தை கைப்பற்றிய போது அணியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Related Stories>>

<<Our other websites>>

Barcelona transfer news Paulinho sign Barcelona, Sports news in Tamil, Football news in Tamil, Tamil sports news, Latest sports news in Tamil, World football news in Tamil, Tamil news, Sports Tamil news