நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடம்தர மாட்டோம்; மனோ கணேசன்

Divide country

Divide country

நாட்டை பிளவுபடுத்துவதற்கு எவருக்கும் இடம்தர மாட்டோம் என அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் மும்மொழிக் கொள்கை அமுலில் இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச கரும மொழிகள் அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற அரச நிறுவனங்களின் பத்திரங்களை மொழி மாற்றம் செய்வதற்கானவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வின் போதே அமைச்சர் மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க நிறுவனங்கள் அனைத்திலும் மும்மொழிக் கொள்கை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரச கரும மொழிகள் அமைச்சிடத்தில் இருந்து மேலும் ஒரு காரியம் களத்திற்கு வருகின்றது. அதற்கமைய மும்மொழிக்கொள்கை அமுலாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் திட்டமாக இது அமையவுள்ளது.

இவ்வாறிருக்கின்ற போது அரச சேவையாளர்கள் பலருக்கு இன்று தமிழ், சிங்களம் என இரு மொழியும் தெரியாது என்று கூறுவதற்கு நான் வெட்கப்படுகின்றேன்.

எமது நாட்டில் இரு மொழிகள் அரச கருமொழிகளாக உள்ளன. அவற்றில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக காணப்படுக்கின்றது.

அதனால், எமது நாட்டில் மும்மொழிக் கொள்கை தான் தற்போது அமுலில் உள்ளது. இது புதிய அரசியலமைப்பை மையப்படுத்தி கூறப்படும் கருத்தல்ல. அந்த அரசிலமைப்பு வரக்கூடும் அல்லது வராமல் இருக்கவும் முடியும். இருப்பினும் எமது நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால் தான், தற்போது மும்மொழி அமுலாகத்தின் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் மூன்றை அறிவித்துள்ளோம். முதலாவதாக அரச அலுவலகங்கள் சகலவற்றிலும் மூன்று மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு குறிப்பிடப்பட்ட பெயர் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

அவை பிழைகளின்றி காணப்பட வேண்டியதும் அவசியமானது. 2 ஆவது விடயம் அரச திணைக்களங்களில் உள்ள பத்திரங்கள் அனைத்திலும் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.

வடக்கில் தமிழில் மாத்திரமும் தெற்கில் சிங்களத்தில் மாத்திரமும் இன்றி நாடு முழுவதிலும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர வேண்டியது அவசியமாகும்.

காரணம் நாடு பிளவுபடவில்லை. பிளவுபடுத்தவும் எவருக்கும் நாம் இடம் கொடுக்க மாட்டோம். தற்போதும் 882 அரச நிறுவனங்களிடத்தில் அவர்களின் பத்திரங்களை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். அவற்றில் மும்மொழிக் கொள்கை எவ்வாறு பின்பற்றுவது என்ற மாதிரியான வடிவமைப்புகளும் அவர்களுக்கு கையளிக்கப்படும்.

இந்த நாட்டில் தேசிய பிரச்சினை என்ற ஒன்று உள்ளது. அதனை தீர்க்கத்தான் யுத்தம் செய்தோம், அரசியலமைப்பு உருவாக்க முயற்சிக்கின்றோம். வெளிநாடுகளுக்கு சென்றும் அதன் தலைவர்களை சந்தித்தும் பேசுவதில் கிடைக்கும் சாதகத்தை பார்க்கிலும் எமது நாட்டினுள் உள்ள பிரச்சினையை புரிந்துகொண்டு செயற்படுவது சிறந்தாகும்.

நாட்டில் மொழிப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் 51 வீதத்தினால் தேசிய பிரச்சினை தீர்ந்துவிடும். அதனால் இன்று நோயாக மாறியுள்ள தேசியப் பிரச்சினைக்கும் உரிய மருந்தை வழங்கிவிட முடியும் என்று நான் கருதுகின்றேன்.

இதனால் தமிழ் சிங்களம் என இருமொழி பேசும் மக்களும் இலங்கை எமது நாடு ஒரே நாடு என்ற எண்ணகருவை ஏற்படுத்த உதவும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular News :

பொலிஸ் தலைமையத்தில் பொலிஸ் மா அதிபர் வெறியாட்டம் : அதிர்ச்சி காணொளி வெளியானது

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பேஸ்புக்கில் பொங்கி எழுந்த ஜூலி..!

பிக்பாஸ் குடும்பத்தில் மீண்டும் நுழையும் ஓவியா : உறுதி செய்த பிக்பாஸ்..!

சுதந்திர தினத்தில் பறிக்கப்பட்ட விவசாயிகளின் சுதந்திரம்

புகையிரத திணைக்களத்தின் பாராமுகம் : வவுனியாவில் கோரவிபத்து : சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி

மஹிந்த குடும்பத்தின் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை

<Our Other Web Sites>>

http://ulaganadappu.com

http://netrikkann.com/

http://sportstamil.com/

http://www.technotamil.com/

http://viduppunews.com/

http://tamilhealth.com/

http://sothidam.com/

http://www.ulagam.com/

Tags; Divide country

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here