200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் ரமில் குலியேவ்!

Ramil Guliyev beats Wayde van Niekerk World athletic championship

Ramil Guliyev beats Wayde van Niekerk World athletic championship

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் எதிர்பார்க்கப்பட்ட இரு வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த, துருக்கியைச் சேர்ந்த ரமில் குலியேவ் (20.09) தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் இறுதிப்போட்டியில், தென்னாபிரிக்காவின் 400 மீற்றர் ஓட்டப்பந்தய சம்பியன் வெய்டி வென் நீகெர்க் மற்றும் பொட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த ஐசாக் மெக்வாலா ஆகியோருக்கு 200 மீற்றர் தங்கப்பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக விளையாட்டு ஆர்வாளர்கள் கருத்து தெரிவித்து சந்தனர்.

எனினும் குறித்த இருவரும் பின்னடைவை சந்திக்க, , துருக்கியைச் சேர்ந்த ரமில் குலியேவ் எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்து வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இவ்வருடம் 400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற்ற, வெய்டி வென் நீகெர்க் 200 மீற்றர் போட்டியில் 2வது இடத்தையும் (20.11 0.106), டிரிண்டட் டொபோகோவைச் சேர்ந்த ஜெரீம் ரிச்சர்ட் 3வது இடத்தையும் (20.11 107) , எதிர்பார்க்கப்பட்ட ஐசாக் மெக்வாலா 6வது இடத்தையும் பிடித்துக்கொண்டனர்.

<More News>>

<<Our other websites>>

Ramil Guliyev beats Wayde van Niekerk World athletic championship, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here