வடமாகாண முதலமைச்சரை செஞ்சோலை சிறுவர்கள் சந்திப்பு

Sencholai Children Meeting Chief Minister Northern Province

Sencholai Children Meeting with Chief Minister Northern Province

பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் செஞ்சோலை சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுவர் இல்ல சிறுமிகள் இன்றைய தினம் வட மாகாண சபை அமர்வினை நேரில் பார்க்கச் சென்றிருந்தனர்.

இதன்போது சபை தேநீர் இடைவேளைக்கு ஒத்திவைக்கப்பட்ட போது, முதலமைச்சர் சிறுமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது, சிறுமிகள் தங்களுக்கு இல்லத்தில் கல்வி கற்க மண்டப வசதி செய்து தரவேண்டும் என்றும் நுளம்பு வலை தந்து உதவுமாறும், கல்வி கற்று முடிந்த பின்னர் வேலை வாய்புக்களை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்குப் பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், இல்லத்திற்கு தேவைப்படும் வசதிகளை எழுந்து மூலம் தந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அத்துடன், வேலை வாய்ப்பை பொறுத்தவரை பொலிஸ் சேவையில் அதிகளவான வேலை வாய்ப்பு உள்ளதாகவும் அதற்கு இணைய முன்வாருங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வட பகுதியில் சட்ட ஒழுங்குகளை நிலை நாட்ட பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்ற முன்வர வேண்டும் என்றும் செஞ்சோலை சிறுமிகளிடம் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

<<மேலதிக செய்திகளுக்கு>>

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்­கொண்­டுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது அமைச்சு பதவியை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல கேள்வி நேரத்தின் போது எழுப்படும் மேலதிக கேள்விகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளமை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் சுவிஸ்குமார் தப்பிச்செல்ல உதவியதான குற்றச்சாட்டு தொடர்பில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிடம் குற்றப்புலனாய்வு துறையினர் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர்.

வடக்கில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதா? என கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த கேள்வியெழுப்பியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் இரண்டு வாரங்களில் தனது தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

<<மேலும் பல செய்திகளுக்கு>>

http://ulaganadappu.com

http://netrikkann.com/

http://sportstamil.com/

http://www.technotamil.com/

http://viduppunews.com/

http://tamilhealth.com/

http://sothidam.com/

http://www.ulagam.com/

Tags; Sencholai Children Meeting with Chief Minister Northern Province

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here