ஒலிம்பிக் சம்பியனுக்கு அதிர்ச்சிக்கொடுத்த இளம் வீரர்!

Norway Karsten Warholm wins 400m hurdles gold

Norway Karsten Warholm wins 400m hurdles gold

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் நடைபெற்ற 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்பந்தயத்தில் நோர்வே நாட்டைச் சேர்ந்த 21 வயதான கர்ஷ்டென் வர்ஹொல்ம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டியில் கடந்த ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற ஒலிம்பிக் சம்பியன் கெரொன் கிலமென்ட்டை எதிர்கொண்ட கர்ஷ்டென் வர்ஹொல்ம் வெற்றியை தனதாக்கிக்கொண்டுள்ளார்.

இவர் போட்டித்துரத்தை 48.35 செக்கன்களில் நிறைவுசெய்து வெற்றிபெற்றுள்ளார். இதேவேளை கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்ற துருக்கியைச் சேர்ந்த யஸ்மனி கொபெல்லோ 48.49 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து இரண்டாமிடத்தையும், ஒலிம்பிக் சம்பியன் கெரொன் கிலமென்ட் 48.52 செக்கன்களில் நிறைவுசெய்து 3வது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளனர்.

தங்கப்பதக்கம் வென்றுள்ள கர்ஷ்டென் வர்ஹொல்ம் இவ்வருடம் நடைபெற்ற 23 வயதுக்குற்பட் ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில், தங்கம் வென்றதுடன், அதே தொடரின் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<More News>>

<<Our other websites>>

Norway Karsten Warholm wins 400m hurdles gold, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here