400 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் அசத்தும் தென்னாபிரிக்க வீரர் : தொடர்ச்சியாக மூன்றாவது தங்கம்!

Wayde Van Niekerk Wins Third Consecutive 400m Global Tittle

Wayde Van Niekerk Wins Third Consecutive 400m Global Tittle

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்  போட்டித்தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒலிம்பிக் சம்பியன் வெய்டி வென் நீகெர்க் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டியில் வெய்டி வென் நீகெர்க்குக்கு கடும் சவால் விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பொட்ஸ்வானா நாட்டைச் சேர்ந்த இசாக் மெக்வாலா, மருத்துவ தேவைகள் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினார்.

இதனை சாதகமாக்கிக்கொண்ட வெய்டி வென் நீகெர்க் போட்டித்தூரத்தை 43.98 செக்கன்களில் நிறைவுசெய்து, தங்கம் வென்றுள்ளார்.

இதேவேளை 44.41 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்த பஹமாஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் கெர்டினர் இரண்டாவது இடத்தையும், கட்டாரைச் சேர்ந்த அப்துள்ள ஹரோன் 44.8 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கொண்ட வெய்டி வென் நீகெர்க் தங்கப்பதக்கம் வென்றுள்ளதுடன், 2015ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கொண்டு தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார்.

வெய்டி வென் நீகெர்க் தொடர்ச்சியாக இரண்டாவது முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் நடைபெற்ற தடகள போட்டிகளில் 3 தங்கங்களை இவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<More News>>

<<Our other websites>>

Wayde Van Niekerk Wins Third Consecutive 400m Global Tittle, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here