ஆறு வருடங்களுக்கு பின்னர் களமிறங்கும் உசைன் போல்ட்!

உலகின் அதிவேக மனிதர் என அழைக்கப்படும் தடகள வீரர் உசைன் போல்ட் பிரான்சில் மொனாகோவில் நடைபெறும் டையமன்ட் லீக் தொடரில் கலந்துக்கொண்டு போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உசைன் போல்ட் போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளார் என்பதை சர்வதேச தடகள கூட்டமைப்பு உறுதிசெய்துள்ளது. இவர் இறுதியாக மொனாகோவில் உள்ள லொயிஸ் மைதானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கொண்டிருந்தார்.

இந்த போட்டியில் 100 மீற்றர் போட்டித் தூரத்தினை 9.88 வினாடிகளில் ஓடி முடித்திருந்தார். தற்போது ஆறு வருடங்களுக்கு பின்னர் அதே மைதானத்தில் இவர் போட்டியில் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here