முதலிடத்தை பிடித்தார் திபே பபோலக்கி! (காணொளி)

Diamond league 2017 : நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றுவரும் டயமன்ட் மெய்வல்லுனர் போட்டிகளில், இன்று நடைபெற்ற 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் போட்ஸ்வனாவைச் சேர்ந்த திபே பபோலக்கி முதலிடத்தை பிடித்துள்ளார்.

திபே பபோலக்கி போட்டித்தூரத்தை 44.94 செக்கன்களில் கடந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் இரண்டாவது இடத்தை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஹொட்சன்-ஸ்மித் மெத்திவ் இரண்டாவது இடத்தையும், செக் நாட்டைச் சேர்ந்த பவல் மஸ்லக் மூன்றாவது இடத்தையும் பிடித்துக்கொண்டனர்.

ஹொட்சன்-ஸ்மித் மெத்திவ் போட்டித்தூரத்தை 45.16 செக்கன்களிலும், பவல் மஸ்லக் போட்டித்தூரத்தை 45.52 செக்கன்களிலும் நிறைவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here